வீரமணி வழக்கு!.. எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை!.. ஜான் பாண்டியன் மறுப்பு..
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போது மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இன்று தொலைக்காட்சியில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் 2024ம் வருடமே நான் உதவி ஆணையர் கண்ணனிடம் புகாரளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் சாந்தியை சந்தித்தபோது வீரமணிக்கும், தனக்கும் பணத்தகராறு இருப்பதாகவும் அது தொடர்பாக தன்னை ஜான் பாண்டியன் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார் என கூறியிருந்தார்..
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஜான் பாண்டியன் ‘வீரமணிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரூ.20 கோடி பணம் பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் SC மாநில தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் சாந்தி இருவரும் என்னை அணுகினர். அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது..
ரஞ்சன்குமாருக்கு யாரோ பணம் கொடுத்து இது போல பேச வைத்திருக்கிறார்கள். என்னிடம் பேச சொல்லி அவரை ஒரு அரசியல் தலைவர்தான் ஏற்பாடு செய்துள்ளார்.
சாந்தி என்னை சந்திக்க விரும்புவதாக ரஞ்சன் கூறினார். சென்னை தாஜ் ஹோட்டலில் சாந்தி என்னை சந்தித்து பேசினார். வீரமணி தன் வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் ரூ.20 கோடி பணம் பெற்று தர வேண்டும் எனவும் சாந்தி கூறினார். ‘இதில் நான் தலையிட முடியாது.. நீங்களே பேசி முடித்து கொள்ளுங்கள்’ என நான் சாந்தியிடம் கூறினேன்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.