1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (13:33 IST)

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

படுக்கை வசதி, மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட புதிய சொகுசு பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

 
தற்போது இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் பல பழைய பேருந்துகள் ஆகும். எனவே, இருக்கை, கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. மேலும், அவற்றில் பயணம் செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால்தான் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்கின்றனர். இதனால், அரசு பேருந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில்தான்,  500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை, மின் விசிறி, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.
 
குளிர்சாதன, படுக்கை வசதியுள்ள பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ரூ.2 வீதமுமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு ரூ.1.55 எனவும், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பேருந்துகளுக்கு கி.மீ. 1.30 எனவும், ஏ.சி. வசதி இல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு கி.மீ. 1 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி பார்த்தால், சொகுசு வசதி பேருந்தில் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.975ம், சேலத்திற்கு ரூ.725, ஈரோட்டிற்கு ரூ.1110ம், கரூருக்கு ரூ.820ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து முதலில் 6 நகரங்களுக்கு ஏ.சி.படுக்கை வசதியுள்ள பேருந்து இயக்கப்படுகிறது. 
 
இதன் மூலம் அரசு பேருந்துகளில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.