திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:16 IST)

நடிகையை கர்ப்பமாக்கிய பிரபல நடிகரின் மகன்

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் ஒரு நடிகையை கர்ப்பமாக்கியதால் அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
இந்தியில் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர்  மஹா அக்‌ஷய் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மஹா அக்‌ஷய் தன்னை திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் இதனால் தான் கர்ப்பமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் கர்ப்பத்தைக் கலைக்க மஹா அக்‌ஷயின் தாயாரும் நடிகையுமான யோசிதா பாபி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
 
இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நடிகர் மஹா அக்‌ஷய், அவரது தாயார் யோசிதா பாலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இது சம்மந்தமாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.