திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (19:53 IST)

டிவி பார்க்க சென்ற சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு மக்கள் கொடுத்த அமோக தண்டனை

நாகாலாந்தில் சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் வந்தபோதிலும் இந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.
 
நாகாலாந்து மாநிலம் லாங்லெங் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தன் வீட்டின் அருகாமையில் உள்ள வீட்டில் தினமும் சென்று டிவி பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வீட்டில் இருந்த இளைஞன் ஒருவன் இந்த சந்திரப்பத்தை பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
 
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோரும் குழந்தைகள் நல அமைப்பினரும் அந்த இளைஞனை சரமாரியாக தாக்கி, அவனது துணிகளை அவிழ்த்து அவனை நிர்வானமாக்கி ரோட்டில் அடித்து இழுத்துச் சென்றனர். அவனது கழுத்தில் நான் ஒரு மைனர் பெண்ணை கற்பழித்தேன் என வாசகத்தை எழுதி மாட்டிவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவனை மீட்டு, காவல் துறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.