செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (07:58 IST)

ஜனவரி முதல் ஆரம்பம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதும், முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்த திட்டம் தற்போது நல்லமுறையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் உள்ள இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது