செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (09:17 IST)

மத்திய அரசு அனுமதித்தால் மாணவர்களுக்கு தடுப்பூசி! – அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தினால் மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளின்படி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு, உலக சுகாதார மையமும் அறிவுறுத்தினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.