தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தை பொங்கலுக்கு கிராமங்கள்தோறும் விளையாட்டு போட்டிகள்! – அமைச்சர் ஆலோசனை!
- சாமிக்கு தடுப்பூசி ஆகாது! செவிலியர்கள் முன்பு சாமியாடிய மூதாட்டி!
- கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா? – அரசுக்கு மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி!
- இந்த கூட்டத்தை என்னால சமாளிக்க முடியாது! – நடுவழியில் பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுனர்!
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு உறவினர்களோ, தன்னார்வலர்களோ கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு உதவி வருகின்றனர். பல மாணவர்களுக்கு அந்த உதவி கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த உதவித் தொகையை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தபட்ட பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
