1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:51 IST)

பேருந்து கட்டணம் உயர்வதாக அன்புமணி குற்றச்சாட்டு.. தமிழக அரசு விளக்கம்..!

transport
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி இருக்கும் நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்காக பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வெளியான செய்தியை தமிழ்நாடு போக்குவரத்து துறை மறுத்துள்ளது.

மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு திட்டமும் தற்போது தமிழ்நாடு அரசிடம் இல்லை என்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் இப்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்வு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva