அண்ணாமலை, எடப்பாடியாருக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு.. செல்வார்களா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தமிழக அரசு அழைப்பு விடுதிருக்கும் நிலையில் இருவரும் செல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் அவர்கள் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை பங்கேற்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்கள் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட சில திரை உலக பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்க்ர்ர்ற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva