வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:14 IST)

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த மாநில அரசு முடிவு

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு பாதுகாப்புடன் நடக்கும் என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று காலை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிளஸ் டூ தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு பாதுகாப்புடன் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு 23 வழிகாட்டி முறைகள் வெளியிடப்பட்டதை அடுத்து தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யும் எண்ணம் மாநில அரசுக்கு இல்லை என்றும் எனவே பிளஸ் 2 தேர்வை பாதுகாப்புடன் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.