1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:01 IST)

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: சொல்லாமல் சொன்ன அரசு!

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத என்ன வழி என்பது குறித்தும் ஆலோசனையில் விவாதித்து வருவதாகவும் கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏப்ரல் 16 ஆம்  தேதி முதல் செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. செய்முறை தேர்வு வழிமுறை வெளியானதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.