1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (09:09 IST)

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. 

 
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத என்ன வழி என்பது குறித்தும் ஆலோசனையில் விவாதித்து வருவதாகவும் கூறப்பட்டது.  
 
ஆனால் தற்போது 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
# இயற்பியல், வேதியியல், கணிப்பொறியியல், தாவிரவியல், உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 16 ஆம்  தேதி முதல் செய்முறைத் தேர்வு. 
 
# கொரோனா பரவலை தடுக்க செய்முறை கூடத்தில் கட்டாயம் PIPETTE பயன்படுத்த வேண்டாம்
 
# மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கைப்பிடித்தல் கட்டாயம்
 
# மாணவர்கள் கிருமிநாசினி சானிட்டைசர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்து கொள்ளவேண்டும்
 
# சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் கூடாது
 
# செய்முறைத் தேர்வு நடக்கும் இடம் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் 
 
# செய்முறை தேர்வுக்கு முன்னரும், பின்னரும் அறையை கிருமி ராசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
 
# செய்முறை தேர்வு உபகரணங்கள், தேர்வுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
 
# சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், சமூக உபகரணங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 
 
# ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே தேவையான இட அளவு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
# சம்பந்தப்பட்ட அனைவரும் தெர்மல் ஸ்கேனரால் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.   
 
 # காத்திருப்பு அறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வ‍ேண்டும்.
 
# கழிவறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, போதுமான தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
# கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வு நடத்தலாம். 
 
# நோய் கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால் செய்முறை தேர்வை வேறு பள்ளியில் நடத்தலாம்.