1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:13 IST)

நவம்பர் 19ல் அமைச்சரவை கூட்டம்: வெள்ள நிவாரண நிதி குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது என்பதும் இந்த வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது 
 
இதுகுறித்து நவம்பர் 19ஆம் தேதி 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் கூட இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாகவும் இந்த கூட்டம் முடிந்த பிறகு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது