தொடர்புடைய செய்திகள்
- கேலோ: உணவுத் தட்டுபாடு என்பது வதந்தி! தமிழ்நாடு ஃபேக்ட் செக் குழு தகவல்
- தடையை மீறி கோயம்பேடு வந்த ஆம்னி பேருந்துகள்.. அரசின் நடவடிக்கை என்ன?
- சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது: தமிழக அரசு
- குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது? ராமதாஸ்
- ஜெயலலிதா வழக்கில் ரூ.5 கோடி கட்ட வேண்டும்..! தமிழக அரசுக்கு பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தமிழக அரசு தலைமை வழக்கறிஞரை அடுத்து மேலும் 2 வழக்கறிஞர்கள் ராஜினாமா: என்ன காரணம்?
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமாவிற்கு காரணம் கூறவில்லை என்றாலும் பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் அலசப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில் மேலும் சிலர் ராஜினாமா செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் இரண்டு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்து உள்ளதாகவும் சிலம்பண்ணன் மற்றும் அருண் ஆகியோர் செய்துள்ளதை அடுத்து 11 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருந்த நிலையில் தற்போது ஒன்பது பேர் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி முத்துகுமார் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்கள் உள்பட 3 வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு அரசு புதிய கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் குறித்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
