1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:24 IST)

சசிகலாவின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு: புதிய உத்தரவு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை வழங்க உள்ள நிலையில் இதில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
இதன்படி அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு ரேஷனில் பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு கரும்பின் அதிகபட்ச விலை ரூபாய் 33 ஆக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும் கரும்பின் உயரம் ஆறு அடிக்கு குறையாமல் கொள்முதல் செய்யப்படும் என்றும் நோய் தாக்கிய கரும்புகள் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது .