1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona restrictions announced in Tamil Nadu

கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு- தமிழக அரசு

தமிழக  அரசு
இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவது அலை பரவல் உள்ள நிலையில், தற்போது, நாடு  முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் இத்தொற்றைக் குறைக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஜனவரி 10 ஆம் தேதி வரை துணிக்கடை நகைக்கடை, உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா பயிற்சி நிலையங்கள், சலூன்களில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி ; இறப்பு சார்ந்த  நிகழ்வுகளில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளார்

மேலும்,மழலையர்-  நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி இல்லை; 1 ஆம் வகுப்பு  முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை அனுமதி இல்லை;  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்; மெட்ரோ ரெயில்களில் 50% பெருக்கு மட்டுமே அனுமதி எனவும், . வழிபாட்டுத்தளங்களில் தற்போதுள்ள  வழிகாட்டு நடைமுறையே தொடரும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை: சவுமியா சுவாமிநாதன்