அடிக்கடி கரும்புச்சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்...?
கரும்புச்சாற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுவதால் இது தொண்டைப்புண், வயிற்றுப்புண்களை குணமாக்குகிறது.
தொண்டையில் அரிப்பு, எரிச்சல் உள்ளது போல் உணர்ந்தால் கரும்புச்சாற்றை சாப்பிடலாம். இது வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய் தொற்றுக்களை தடுக்கக்கூடியது.
கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும். அதன் வேதியியல் சமச்சீர் தன்மையையும் சரியான விகிதத்தில் வைக்கிறது. எனவே செரிமானத் திறன் மேம்பட விரும்புவார்கள் தினமும் ஒரு வேளை கரும்பு ஜூஸ் அருந்துவது நல்லது.
கரும்பில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. பற்சொத்தை போன்றவை ஏற்படாமல் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. கரும்புகளை கடித்து சாப்பிட்டாலே பற்களுக்கு நல்ல வலிமையை தரும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் அடிக்கடி சோர்ந்து காணப்படுபவர்கள், கரும்புச்சாற்றை பருகுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். மேலும் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். கரும்பு சாறில் சர்க்கரை சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் சென்று ரத்தத்தில் இழந்த சக்கரை சத்துக்களை ஈடு கட்டி, உடல் உடனடியாக சுறுசுறுப்பு, உற்சாகம் அடைய உதவுகிறது.
கரும்புச்சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்கிறது. உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
தினமும் இருவேளை கரும்புச் சாறில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் எத்தகைய சிறுநீரக தொற்று வியாதிகளும் வெகு விரைவில் குணமாக உதவும். மேலும் கரும்புச் சாறில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளன.