1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn government withdraw the rti order

சட்டம் ஒழுங்கு RTI விவகாரம்!.. வாபஸ் பெற்ற தமிழக அரசு!..

rti
இனிமேல், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்கள் RTI -யின் வராது என தமிழக அரசு இன்று காலை அறிவித்தது. அதன்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் மரணங்கள், துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கைகள் இனிமேல் RTI -யின் கீழ் பெற முடியாது.

மேலும் சமூக சாதிய மோதல்கள், போராட்ட வழக்குகளை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களையும் RTI - யின் கீழ் பெற முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற்றது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாராபுரத்தில் பிரச்சாரம்!.. தேதி குறித்த முதல்வர் விஜய்!.. 10 ஆயிரம் பேர் பங்கேற்பு..