தாராபுரத்தில் பிரச்சாரம்!.. தேதி குறித்த முதல்வர் விஜய்!.. 10 ஆயிரம் பேர் பங்கேற்பு..
தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வருகிற அக்டோபர் 6 தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே அந்த தொகுதி மக்களின் அதிருப்தியை தாண்டி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் தவெக இருக்கிறது. அதைவிட இந்த 2 இடைத்தேர்தலிலும் கிடைக்கும் வெற்றி தவெகவுக்கு முக்கியமானதாகும். எனவேதான், முதல்வர் ஜோசப் விஜய் அந்த 2 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் மதுராந்தகத்திற்கு சென்று முதலமைச்சர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில்தான், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெட்பாளரை ஆதரித்து வருகிற 30-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருக்கிறார். தாராபுரம் உடுமலை சாலையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பரப்பரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாராபுரம் தொகுதி மக்களுக்கு மட்டும் QR கோடுடன் கூடிய அனுமதி அட்டை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.