1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govenment order about tasmac shops

இரவு 10 மணிக்குள் கடைகளை மூடவேண்டும்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!..

vijay
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, டாஸ்மாக் கடைகளை மூடுவது போன்ற அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே நடத்தினாலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்துக் வாங்குவது, இரவு 10 மணிக்கு மேலூம், காலை 10 மணிக்குள்ளும் கள்ளச்சந்தையில் சரக்கு விற்பது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. போலீசாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் டாஸ்மார்க் தொடர்பான பல அதிரடி அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.. டாஸ்மாக் கடைகளில் மூடப்பட்டதை காவல்துறை அதிகாரிகள் புகைப்படம் எடுத்து குழுவில் பதிவிட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், எலைட் மதுபான கடைகள்(FL1) இரவு 11 மணியும், F12 கடைகள் இரவு 12 மணிக்குள்ளும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  அதோடு கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்கக் கூடாது.. அப்படி விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
2 வருடங்கள் விஜயை விட்டுவிட வேண்டும்!.. பெரிய சவால்!.. ரஜினி சொன்ன அட்வைஸ்...