செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (09:43 IST)

சோனியாகாந்தி குடும்பத்தின் ஆதரவு யாருக்கு? மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

Mallikarjun Kharge
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு உள்ள மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். 
 
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர் 
 
இந்த நிலையில் சோனியா காந்தி குடும்பத்தினர் ஆதரவு மல்லிகாஜூர்னே கார்கேவுக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து கூறிய அவர், ‘ சோனியா காந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக கூறுவது தவறு என்றும் மூத்த தலைவர்களும் தொண்டர்களும் என்னை போட்டியிடுமாறு வற்புறுத்தியதால் போட்டியிடுகிறேன் என்றும் யாருக்கும் எதிராகவும் ஆதரவாகவும் நான் போட்டியிடவில்லை என்றும் கட்சியை வலுப்படுத்த போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார் 
 
மேலும் நான் மாற்றத்திற்கான வேட்பாளர் என்றும் தேர்தல் முடிந்தவுடன் சீர்திருத்தம் தொடர்பான முடிவு அனைத்து தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva