1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN CM EPS will meet PM Modi coming 8th

ஓபிஎஸ்-தினகரன் பரபரப்புக்கு இடையே டெல்லி செல்லும் ஈபிஎஸ்

ஈபிஎஸ்
ஓபிஎஸை தினகரன் சந்தித்ததாகவும், தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாகவும் இரண்டு மாறுபட்ட செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மொத்தத்தில் இருவருமே முதல்வர் ஈபிஎஸ் ஆட்சிக்கு வேட்டு வைக்க முயற்சி செய்துள்ளார்கள் என்பது மட்டும் உண்மை என புரிகிறது.

இந்த நிலையில் ஓபிஎஸ், தினகரன் பரபரப்புக்கு இடையே நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். வரும் 8ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தலை அதிமுக, பாஜக இணைந்து சந்திப்பது குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியல் தற்போது பரபரப்பான சூழலில் இருக்கும் நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சபரிமலைக்கு எங்கள் வீட்டு பெண்களை அனுப்ப மாட்டோம்: ஐயப்ப பக்தர்கள் உறுதி