வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (16:54 IST)

பாஜகவினருக்கு தூதுவிட்ட தினகரன் ஆட்கள்: தமிழிசை பேட்டி!

தினகரன் நேற்று அளித்த பேட்டி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் அதிமுகவுடன் ஒன்றாக இணைவது தொடர்பாக ஒபிஎஸ், அவரது மகன் ஆகியோர் என்னை அழைத்தனர். அந்த சந்திப்பின் போது தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என மன்னிப்பு கேட்டார் என கூறினார். 
 
மேலும், ஓபிஎஸ் தன்னை வந்து சந்தித்த போது, அந்த சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டு என்னுடன் வருவதாகாவும் அவர் கூறினார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
ஆனால், பன்னீர் செல்வம் நான் தினகரனை சந்தித்தேன். எனக்கும் அவருக்கு பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் சந்தித்துக்கொண்டோம். ஆனால் அந்த சந்திப்பின் போது தினகரன் கூறியது போல எதுவும் நடக்கவில்லை என கூறினார். 
 
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்த்தரராஜனிடம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன்னால், தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவினரை சந்திக்க வேண்டும் என பலமுறை தூது விட்டிருக்கிறார்கள். 
 
யார், யார் எப்போது, எதற்காக சந்தித்தார்கள் என்பது இப்போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்களின் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.