வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (19:57 IST)

ஓபிஎஸ்-ஐ பல உண்மைகளை ஒத்துக வைப்பேன்: தினகரன்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தினகரனை சந்தித்தது உண்மைதான் எனவும் ஆனால் அந்த சந்திப்பில் அவர் கூறியது போல எதுவும் நடக்கவில்லை என கூறியிருந்தார். 
 
மேலும், தினகரன் குழப்பமான மனநிலையில் இவ்வாறு பேசி வருகிறார். கட்சியையும் ஆட்சியையும் தனது குடும்பத்தின் பிடியில் கொண்டு வருவதற்காகவே அவர் இவ்வாறு செய்து வருகிறார் என கூறினார். 
 
இந்நிலையில் இதற்கு தினகரன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, பிப்ரவரி 7, 2017 அன்று ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அதற்கு மறுநாளே, நான்தான் அவரை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதாக ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டார்.
 
எங்கள் குடும்பத்தினரின் பிடியில் அதிமுக சிக்கக் கூடாது என்று கூறியவர், ஏன் என்னை ரகசியமாக வந்து சந்திக்க வேண்டும்? அதன்பிறகு, ஒன்றரை வருடமாக என்னிடம் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார் ஓபிஎஸ்.
 
மீண்டும் அதே நண்பர் மூலம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டும் என கேட்டார். ஆனால், நான் அவரைப் பார்க்க மறுத்தேன்.
 
என்னைப் பார்த்தேன் என இப்போது ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார் அல்லவா? அதேபோல் மீண்டும் என்னை சந்திக்கக் கேட்டு கொண்டதையும் ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என கூறியுள்ளார்.