1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (12:23 IST)

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து ஆளுங்கட்சியினர்கள், குறிப்பாக அமைச்சர்களுக்கு பயம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தங்களுடைய சொந்த தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் பல அமைச்சர்களுக்கு வந்துள்ளதாகவும், இதனை அடுத்து அவர்கள் தொகுதி மாற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் தொகுதி மாறி அமைச்சர்கள் போட்டியிட்டால் திமுகவினரின் எதிர்மறை பிரச்சாரத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதால் அமைச்சர்கள் சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு செல்லக்கூடாது என அதிமுக மேலிடம் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது 
 
ஆனால் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே இந்த முறை தொகுதி மாறி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை விட்டு விட்டு கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக கவுண்டர்கள் நிறைந்த தொகுதி குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முதல்வரே சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டால் திமுகவினர் இது குறித்து பிரச்சாரம் செய்ய வழிவகுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்