1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (11:31 IST)

நான் யாருக்கும் போட்டியில்லை… விவேக் டிவீட்!

நடிகர் விவேக் கடந்த வாரத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட போட்டோஷூட் போட்டோக்கள் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. முழுக்க முழுக்க வெள்ளை உடையில் வெள்ளை நிறத்தின் பின்னணியில் இருந்த இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர் 

இந்நிலையில் நடிகர் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் முடி மற்றும் கோட் சூட் எனக் காணப்பட்டதால் அந்த புகைப்படங்களை அஜித்துக்கு போட்டியாக விவேக் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் அதுகுறித்து விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அன்பு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள். எனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் பார்த்துவிட்டு ஹீரோக்களுக்கு போட்டியாக விவேக் என்று செய்திகள் வருகின்றன. நான் யாருக்கும் போட்டி இல்லை. என்னை யாருடனும் ஒப்பிடவேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.