1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (23:28 IST)

பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறிது

ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது.

இன்று 7;30 மணிக்கு தொடங்கியுள்ள எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்தது.

இன்றைய போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,  கடைசி  ஓவரில் 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றி பெற்றது.

நவம்பர் 8ம் ஆம் தேதி ஐதராபாத் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.