ராஜ்யசபா எம்பி பதவியை பெறுவது யார்? குஷ்பு, அண்ணாமலை இடையே போட்டா போட்டி?
சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன
கர்நாடக மாநிலத்திலுள்ள எம்பி ஒருவர் சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்ததால் அந்த பதவி காலியாக உள்ளது. அந்த பதவியை நிரப்பும் வகையில் குஷ்பு அல்லது அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் குஷ்புவுக்குதான் ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை மாறவும் வாய்ப்பு இருப்பதால் குஷ்புக்கு தான் ராஜ்யசபா பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் நேற்று வந்த குஷ்புக்கு ராஜ்யசபா பதவியா என பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் விரைவில் ராஜ்யசபா எம்பி பதவியை குஷ்பு பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது
பல ஆண்டுகளாக திமுகவிலும் காங்கிரஸில் இருந்த குஷ்புவுக்கு ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்கவில்லை ஆனால் பாஜகவில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது