1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (11:19 IST)

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு

காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுகாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இடைவிடாத போராட்டங்கள் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூடும் தேதியை சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபை வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது துறை ரீதியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில் ஜூன் 4ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திமுக உள்பட எதிர்க்கட்சிகள் திட்டமிடும் என்று கூறப்படுகிறது.