மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த பாஜக தலைவர்கள்
கடந்த சில மாதங்களாக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் கட்சியாக திமுக உள்ளது. காவிரி, நியூட்ரினோ, நீட், மீத்தேன், ஸ்டெர்லைட் உள்பட பல பிரச்சனைகளுக்காக மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து திமுக குரல் கொடுத்து வருகிறது. மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது கருப்புக்கொடி காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பாஜகவின் அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த்சின்ஹா மற்றும் சத்ருஹன்சின்ஹா ஆகியோர் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. 3வது அணி குறித்து இருவரும் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 3வது அணி குறித்து சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ள நிலையில் தற்போது பாஜக அதிருப்தி தலைவர்களும் சந்தித்துள்ளதால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.