திமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு

Last Modified திங்கள், 15 அக்டோபர் 2018 (22:23 IST)
திமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விடுவிக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டி.கே.எஸ் இளங்கோவன் திமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக மட்டுமே க.அன்பழகன் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் அதற்கான எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 170 இடங்களில் போட்டியிடும் என டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி அளித்தபோது திமுக தலைமை அதனை மறுத்து அறிக்கை கொடுத்தது. அதன் பின்னர் டி.கே.எஸ் இளங்கோவன் மன்னிப்புக்கோரி கடிதம் அளித்தார். இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்திக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் பேட்டியளித்த நிலையில் அவர் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்தே விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :