செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (20:03 IST)

சைவம், அசைவம்... கூவத்தூர் ரகசியம் இதுதான்: உதயகுமார் பேட்டி!

தமிழக அரசை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். தற்போது இவருடன் இணைந்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
 
மு.க.ஸ்டாலின், தினகரன், கருணாஸ், சமீபத்தில் விஜய் என யார் யார் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை விமர்சிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். 
 
கருணாஸ் சில வாரங்கலுக்கு முன்னர் கூவத்தூர் ரகசியத்தை வெளியே சொல்லிவிடுவேன் என பூச்சாடி காட்டினார். இதற்கு இவரது பதில் பின்வருமாறு, 
 
அதிமுக எம்எல்ஏ-க்கள் எல்லோரும் அந்த விடுதியில் தங்கியிருந்தோம், பேசினோம், சாப்பிட்டோம், தூங்கினோம். என்னை போன்றவர்கள் சைவம் சாப்பிட்டனர், கருணாஸ் போன்றவர்கள் அசைவம் சாப்பிட்டனர். இதுதான் கூவத்தூர் ரகசியம். இதைத்தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 
 
ஆட்சியை குறைகூற கருணாஸுக்கு என்ன தகுதி உள்ளது? அவர் என்ன ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதியா? அம்மாவின் கருணையால் எம்எல்ஏ ஆனவர், அவ்வளவுதான் என பதிலளித்தார்.