புரோ கபடி 2018: அணிகளின் புள்ளிகள் நிலவரம்

Last Modified திங்கள், 15 அக்டோபர் 2018 (21:54 IST)
புரோ கபடி போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று வரை மொத்தம் 16 போட்டிகள் முடிவடைந்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் பாட்னா அணி உபி அணியையும், ஹரியானா அணி புனே அணியையும் வீழ்த்தியுள்ளது. இன்று ஓய்வு நாள் ஆகும்.

இந்த நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின்படி 'ஏ' பிரிவில் புனே அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பை அணி 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அதேபோல் பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், உபி அணி 8
புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது


இன்னும் 70 போட்டிகளுக்கும் மேல் மீதி இருப்பதால் இப்போதுள்ள புள்ளிகளை வைத்து இறுதி போட்டிக்கு முன்னேறுவது எந்த அணி என்பதை கணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :