புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (19:55 IST)

நான் அவர்களை தேடி போகவில்லை ..அவர்கள் தான் என்னை தேடி வந்தனர் - இளையராஜா

யாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை என்றும், கமல், ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை  தேடி வந்தனர் என்றும், இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது ரஜினி கமல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
இளையராஜாவின் 75-ம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமான விழா ஒன்று , சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி. ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா கூறியபோது,
 
கமல் மற்றும் ரஜினியை தேடி நான் போகவில்லை மாறாக அவர்கள் தான் என்னை தேடி வந்தனர் என்றும், மேலும் யாரையும் நம்பியும் நான் சென்னைக்கு வரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினியும் கமலும் தான். இவர்களின் மவுசு தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதுமே பறந்துள்ளது. இவ்வளவு பிரபலமான இவர்களை நம்பி நான் வரவில்லை என இசைஞானி இளையராஜா  கூறியதால்,  ரஜினி மற்றும் கமல்  ரசிகர்கள் இளையராஜா மீது கோபங்களை கொட்டி வருகின்றனர்.