1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TKS Elangovan DMK will not have alliance with BJP

திமுக - பாஜக கூட்டணி? ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார்??

பொன் ராதாகிருஷ்ணன்
திமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடமில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். 
 
தற்போது உள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படும். அந்த கூட்டணியானது திமுகவுடனும் இருக்கலாம், அதிமுகவுடனும் இருக்கலாம் அல்லது இரண்டும் இல்லாமலும் கூட இருக்கலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என கூறினார். 
 
பொன்னாரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன். அவர் கூறியதாவது, திமுக கூட்டணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். 
 
தேர்தல் நேரத்தில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெறலாம். மக்கள் விரோத பாஜகவின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறோம். மேலும் கடுமையாக எதிர்ப்போம். அதிமுக - பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவியிருக்கலாம் அதனால் கூட இப்படியொரு கருத்தை பொன்னார் தெரிவித்திருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
விமானத்தில் பிறந்த குழந்தை… வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம்!