1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tiruvarur thiyagaraja temple car rally

திருவாரூரில் தொடங்கியது பிரசித்தி பெற்ற ஆழித் தேரோட்டம்!

Tamilnadu
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

மக்கள் தேரோட்டத்தை கண்டு களிக்கும் விதமாகவும், திருவாரூரில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் இருந்து மக்கள் பலர் தேரோட்டத்திற்கு வருவதால் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மாஸ்க் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டு வாங்க ஏற்பாடு! – சென்னை மாநகராட்சி!