1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Premalatha had not corona

பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை! – சுகாதாரத்துறை அதிகாரிகள்!

Tamilnadu
நேற்று கொரோனா பரிசோதனைக்கு பிரேமலதா செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று அவருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா பிரச்சாரத்திற்கு சென்றிருந்த நிலையில் அவரை கொரோனா சோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அழைப்பை மறுத்து பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரச்சாரம் முடிந்த பின் பிரேமலதா கொரோனா சோதனை செய்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் முதன்முறையாக இருமுறை உருமாறிய கொரோனா! – சுகாதாரத்துறை அமைச்சகம்!