திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (11:48 IST)

திருநாவுக்கரசருக்கு திருச்சி தொகுதி கிடையாதா? துரை வைகோவுக்காக குறி வைக்கும் மதிமுக.!

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநாவுக்கரசர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருச்சி தொகுதியை விட்டுக்கொடுக்க கே என் நேரு அவர்களுக்கு மனம் இல்லை என்றாலும் தலைமை உத்தரவுக்காக வேறு வழியின்றி திருநாவுக்கரசை வெற்றி பெற வைத்தார்.

ஆனால் திருநாவுக்கரசு வெற்றி பெற்றவுடன் திருச்சி தொகுதிக்கு பெரிதாக எதுவும் அவர் செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர். மேலும் திமுக இந்த முறை திருச்சி தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறது.

இந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு திருச்சிக்கு தொகுதி கிடைக்காது என்ற நிலையில் மதிமுக துரை வைகோவுக்காக அந்த தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.  

காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதி கிடையாது என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த தொகுதியை திமுக தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது மதிமுகவுக்கு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva