திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (19:33 IST)

மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது- துரை வைகோ தகவல்

மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில்,  6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளன.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில்,  தங்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அனைத்து கட்சிகளும் தயார்படுத்தி, தொகுதி பங்கீடுகள் பற்றி கூட்டணி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

இந்த  நிலையில், மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிட விரும்பும் இடங்கள் எனவை என்பது பற்றி மதிமுக தலைமை  நிலையைச் செயலாளர் துரை வைகோ இன்று பேட்டியளித்துள்ளார்.

அதில்,  மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், விருதுநகர், திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளோம்.

விருதுநகர் அல்லது திண்டுக்கல் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என மதிமுகனவினர் விரும்புகின்றனர். தனிச்சின்னத்தில் போட்டியிடவும் கட்சியினர் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.