1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. people gathering in tiruchendur murugan temple

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

temple
தமிழர்கள் இன்று பொங்கல் கொண்டாடி வரும் நிலையில் பலரும் சாமி தரிசனத்திற்காக மிழகத்தில் உள்ள சிறப்பான கோவில்களுக்கும் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதுகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு அதன்பின் தங்கள் வீடுகளுக்கு சென்று பலரும் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தார்கள். அதில் பலரும் அழகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் வந்தனர். ஒரு பக்கம் கடல், மற்றும் நாழிகை தீர்த்தத்தில் பலரும் புனித நீராடினார்கள்.

அதன்பின் சில மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
. கடலில் ஆழமான பகுதியில் சென்று விடக்கூடாது என்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் கோவிலை நோக்கி வருவதால் திருச்செந்தூர் முழுவதும் மனித கூட்டங்களாக காணப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடமின்றி சிலர் தவித்து வருகிறார்கள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!