தொடர்புடைய செய்திகள்
கோவையில் கடைகள் திறக்கும் நேரம்!
கோவையில் சில நாட்களாகவே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் ( 03-08-21) மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. அதிக உயிரிழப்புகளையும் பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. விரைவில் மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
கோவையில் சில நாட்களாகவே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் நாளை ( 03-08-21_ மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள், பேக்கரிகள்,, டீ கடைக்ள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும்04-08 -21 அன்று முதல் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
