18 வயது குறைந்தோருக்கு தடுப்பூசி எப்போது? – தமிழக அரசு விளக்கம்!
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மாநிலங்கள்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேர்வழி இயக்கம் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு தமிழக அரசு ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின் அதன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.