வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (09:31 IST)

மீண்டும் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பியது. அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் சேலம், தஞ்சாவூர், ஈரோடு, உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது. இது இந்த இரண்டு மாதங்களில் மூன்றாவதாக எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.