தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல்..
தமிழகத்தில் 3000 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் பல குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.விஜய்பாஸ்கர் ஆய்வுகளை மேற்கொண்டார். பின்பு நிரூபர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, பெற்றோர்கள் டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும். மேலும் தமிழகத்தில் இது வரை 3,900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.