செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (15:06 IST)

யூடியூபில் ஆபாச பதிவு - டிக் டாக் திவ்யா கைது

யூடியூபில் ஆபாச பதிவு வெளியிட்டு வந்த திவ்யா எனும் பெண் போலீஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

 
தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் டிக்டாகில் பிரபலமானவர். இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப் வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 
 
இந்நிலையில் திவ்யா யூடியூபில் ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக சைபர் கிரைம் போலீசார் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் திவ்யாவின் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. ஆனால் அவர் தலைமறைவான நிலையில் போலிஸார் இன்று நாகூரில் திவ்யாவை கைது செய்துள்ளனர்.