செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (14:21 IST)

அசிங்கமா பேசினா அவார்டு குடும்பங்களான்னு என் குழந்தை கேக்குறா – ஜி பி முத்து மீது பிரபல நடிகர் புகார்.

காதல் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் காதல் சுகுமார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் இன்றளவும் காதல் சுகுமார் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார். அதில் டிக்டாக் பிரபலமான ஜி பி முத்து உள்ளிட்ட பலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 
அதில் ‘மாணவர்கள் இப்போது ஆன்லைன் வழியாக கல்வி கற்று வருகின்றனர். ஆனால் டிக்டாக் இலக்கியா, ஜி பி முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியவர்களின் வீடியோக்கள் அவர்களை தீய வழிக்கு இழுக்கிறது. சென்சார் இல்லாத சமூகவலைத்தளங்களில் இது போன்ற வீடியோக்களை எல்லாம் பார்த்து சிறுவர்கள் தவறான வழியில் சென்று விடுவார்கள். 
 
மேலும், ஒரு சில சேனல்கள் அவர்களை அழைத்து விருது கொடுக்கிறார்கள். இதைப் பார்த்த என்னுடைய மகள் கேட்கிறாள் நானும் இதுபோன்று ஆபாசமாக பேசினால் எனக்கும் விருது கொடுப்பார்களா? என கேட்கிறாள். எனவே காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஊடகங்களிலும் அது சம்மந்தமாக பேசினேன். இதையடுத்து ஜி பி முத்து உள்ளிட்டவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.’ என அந்த புகாரில் கூறியுள்ளார்.