செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (11:37 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோருக்கு ஜூலை 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் என எழும்பூர் நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து 3 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  ஆறு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சிவிசிஐடி விசாரித்து வரும் நிலையில் இதுவரை 11 பேர்களை கைது செய்துள்ளது. மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் இந்த குற்றத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்றும் அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran