1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2024 (14:02 IST)

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

14 வயது சிறுமி தனது காதலை ஏற்க மறுத்ததை அடுத்து சிறையில் இருந்த 26 வயது இளைஞர் ஜாமினில் வெளிவந்து அந்த சிறுமியை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் 26 வயது சுரேஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த சிறுமி சுரேஷை காதலிக்க மறுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் சிறுமிக்கு காதல் தொந்தரவு அளித்த சுரேஷ் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
 
இதனை அடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியின் வீட்டை அவர் அவ்வப்போது நோட்டமிட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் இல்லாததை அறிந்து அந்த நேரத்தில் திடீரென அவர் வீடு புகுந்து சிறுமியை சரமாரியாக வெட்டி உள்ளார்.
 
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமி சம்பவம் இடத்திலேயே  உயிர் இழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியை வெட்டி கொலை செய்த சுரேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva