1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2024 (10:56 IST)

திராவிட மாடல் திமுக ஆட்சியில் இதுவரை நடந்த கொலைகள் எத்தனை.. பட்டியல் போட்ட பாஜக பிரபலம்..!

திராவிட மாடல் தி மு க ஆட்சியில் இதுவரை நடந்த கொலைகள் எத்தனை என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி  பட்டியல் போட்டுள்ளார். அவர் போட்டுள்ள பட்டியலின் விவரம் இதோ: 
 
1. 28/04/2024 - சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.
 
2. 29/02/2024 வண்டலூர் அருகே திமுக பிரமுகர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. அவர் தப்பிக்க முயன்றபோது, ​​அவரை துரத்திச் சென்று, கத்தியால் அவரது கை, கால்களை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
 
3. 23/05/ 2024, பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை.
 
4. 30/06/2024, சிவகங்கையில் 4 இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் வெட்டியதில் இருவர் படுகொலை.
 
5. 15/02/2024, மதுரை வண்டியூரில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் வெட்டி படுகொலை.
 
6. 02/05/2024, நெல்லை காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தன்சிங் படுகொலை செய்யப்பட்டு கண்டுபிடிப்பு.
 
7. 03/07.2024, சேலத்தில் அ தி மு க பிரமுகர் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை.
 
8.02/07/2024, வேலூரில், ரவுடி ராஜா என்கிற நபரை ஆறு பேர் கும்பகல் ஒன்று கொடூரமாக வெட்டிக் கொன்றது.
 
9. 20/05/2024, திருநெல்வேலி - நெல்லையில் பட்டப்பகலில் தீபக் ராஜா  இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை.
 
10. 10/06/2024, கமுதி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் (51) மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 
 
11. 30/06/2024, கடலூரில் அதிமுக நிர்வாகி மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பலால் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு.
 
12. கோவில்பட்டி - மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிபடுகொலை.
 
13. 29/04/2024 - தஞ்சாவூர் - இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால் காய்கறி வியாபாரி வெட்டிபடுகொலை. 
 
14. 03/07/2024, திருச்சி - நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - இளைஞர் வெட்டிப் படுகொலை; இருவர் கைது.
 
15. 27/04/2024 - மதுரை - மாட்டுத்தாவணியில், பட்ட பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை- தனது தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி!
 
16. 12/04/2024 - தூத்துக்குடி - இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேருக்கு மேற்பட்ட கும்பல் செந்தில் ஆறுமுகம் என்பவரை சராமரியாக ஓட விட்டு விரட்டி வெட்டிக் கொலை.
 
17. 12/06/2024, சென்னை, திருவான்மியூர் - வழக்கறிஞர் வெட்டி படுகொலை. 
 
18. 22/05/2024, திண்டுக்கல் - யாகப்பன்பட்டி டாஸ்மாக் கடை அருகே திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப்(60) என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை.
 
19. 30/03/2024, - மதுரையில் பயங்கரம்! மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட ரைஸ்மில் அதிபர் வெட்டிப் படுகொலை!
 
20. 29/04/2024 - திருநெல்வேலி, மதுபோதையில் நண்பரை வெட்டிப் படுகொலை செய்த இருவர் கைது.
 
21. 09/05/2024, தூத்துக்குடி - ஓசிக்கு மது பாட்டில் தர மறுப்பு, பார் ஊழியர் வெட்டிக் கொலை. 
 
22. 05/07/2024, நேற்று பி எஸ் பி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 
 
Edited by Siva