தொடர்புடைய செய்திகள்
- சென்னை வந்தடைந்தார் மாயாவதி.. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி
- ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு! – நீதிமன்றம் சொல்லும் காரணம் என்ன?
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!
- ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி
- பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!
தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையை ஆம்ஸ்ட்ராங் கொலை காட்டுகிறது: மாயாவதி
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை, தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் , தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது என்றும் சென்னயில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
கட்சி அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர், தேர்வு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சி, தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை செய்துள்ளார் ஆம்ஸ்ட்ராங், தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. சட்டத்தை கையில் எடுத்து தொண்டர்கள் செயல்பட கூடாது, அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
Edited by Siva
